உலகம்

அண்டை நாடுகளை மிரட்டும் சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனா ஏவுகணை நிலைநிறுத்தி அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருவதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மெட்டீஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து ஜேம்ஸ் மெட்டீஸ் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "தென் சீன கடல் விவகாரத்தில் சீனா தனது அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு ஏவுகணைகளை சீனா, தென் சீன கடல் பகுதியில் நிறுவியுள்ளது.

வடகொரியா முழுமையான அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. வரும் 12 -ம் தேதி சிங்கப்பூரில் ட்ரம்ப் - கிம் சந்திக்கும்போது தென் கொரிய அமெரிக்க ராணுவங்களின் பயிற்சி குறித்து விவாதிக்கப்படாது” என்றார்.

தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சாங் யோங்,  அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருக்கும் விவகாரமும், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் குறித்த விவகாரமும் வெவ்வேறானவை  என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT