உலகம்

வடகொரியாவுக்கு எதிராக கூட்டு ராணுவப் பயிற்சியைக் கைவிட்ட அமெரிக்கா, தென்கொரியா

பிடிஐ

வடகொரிய அதிபர் கிம்முடனான சந்திப்புக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளவிருந்த கூட்டு ராணுவப் பயிற்சியைக் கைவிட அமெரிக்காவும், தென்கொரியாவும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தென்கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ராணுவ கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு தென் கொரியாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை நடத்தியது.

வடகொரியாவுக்கு எதிராக  அமெரிக்கா - தென் கொரிய ராணுவப் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது.

இதன் பின்னர் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த நிலையில் ட்ரம்ப் - கிம் இடையே இச்சந்திப்பு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. கிம் உடனான சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியைக் கைவிட ட்ரம்ப் சம்மதிருந்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT