ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 19 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில், "ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்திலுள்ள ஹஸ்கா மினா மாவட்டத்தில் ஐஏஸ் தீவிரவாதிகளின் மறைவிடத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 19 ஐஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகளின் இரண்டு முக்கிய படை தளபதிகளான குவாரி எஸ்ரர் மற்றும் முல்லா ஹஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வான்வழித் தாக்குதலை ஆப்கான் அரசு நடத்தியதா? அல்லது அமெரிக்காவின் நேட்டோ படை நடத்தியதா? என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.
எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக ராணுவத்தினர், போலீஸாரை குறிவைத்து தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தத் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.