உலகம்

கல்பனா சாவ்லாவை புகழ்ந்த ட்ரம்ப்

செய்திப்பிரிவு

மறைந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார்.

அமெரிக்காவில் மே மாதம் ஆசிய அமெரிக்க மற்றும் பசுபிக் தீவுப் பகுதிகளின் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து ட்ரம்ப் பேசும்போது, " கல்பனா சாவ்லாவின் தைரியமும், அர்பணிப்பும் விண்வெளி வீராங்கனையாக கனவு காணும் லட்சக்கணக்கான அமெரிக்க சிறுமிகளுக்கு உத்வேகத்தை தருகிறது. விண்வெளி சார்ந்த திட்டங்களுக்குகாக தன்னை அர்பணித்துக் கொண்ட கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கதாநாயகன் “ என்று கூறினார்.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தவர் (1962) கல்பனா சாவ்லா.

1984-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986-ல் கொலரேடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து பயின்று விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் சேர்ந்தார். அங்கு கம்ப்யுடேஷனல் ஃப்ளுயட் டைனமிக்ஸ் மற்றும் வெர்டிகல் / ஷார்ட் டேக்ஆஃப் அன்ட் லாண்டிக் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

2003-ம் ஆண்டு விண்வெளியில் பறக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107)-ல்கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு விண்ணில் பாய்ந்தது. பிப்ரவரி 1-ம் தேதி, 16 நாட்கள் பயணம் முடித்து தரையிறங்கு வதற்குச் சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது, டெக்சாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். கல்பனா சாவ்லாவுக்கு அப்போது வயது 41.

SCROLL FOR NEXT