உலகம்

இராக்கில் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க விமானங்கள் குண்டு மழை

செய்திப்பிரிவு

இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறி வைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவை அடுத்து தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் வான் வழி தாக்குதலை வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக இரு அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசின. குர்திஷ் பகுதியில் ஜிவர், மஹ்முர் ஆகிய நகரங்களில் பதுங்கிய தீவிரவாதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதே நேரத்தில் இராக்கின் வடக்கிலுள்ள மலைப் பகுதியில் தீவிரவாதிகளால் கட்டுப்பாட்டுக் குள் வைக்கப்பட்டுள்ள யசிதி சிறுபான்மையினருக்கு உதவும் வகையில் உணவு, குடிநீர் ஆகியன விமானங்கள் மூலம் வீசப்பட்டன.

அரேபிய வளைகுடா பகுதியில் முகாமிட்டுள்ள போர்க் கப்பலில் இருந்து விமானங்கள் சென்று குண்டு மழை பொழிந்தன. ஈராக் கின் குர்திஷ் பகுதியில் தலைநக ரான எர்பில்லை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நெருங்கவிடாமல் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக உள்ளது. ஏனெனில் அங்கு அமெரிக்க துணைத் தூதரகமும், ஏராளமான அமெரிக்கர்களும் உள்ளனர்.

அமெரிக்காவின் தாக்குதலில் தீவிரவாதிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் ஏதுமில்லை. அதேநேரத்தில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு இராக் மக்களில் ஒரு தரப்பினரிடையே வரவேற்பும் மற்றொரு தரப்பினரி டையே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய இடங்களை கைப்பற்றி வேகமாக முன்னேறி வருவது குறித்து அச்சம் அடைந்தி ருந்தோம். இப்போது அவர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்து வது நல்ல செய்திதான் என கார்வான் அகமது என்று இராக்கை சேர்ந்த கார் டிரைவர் தெரிவித்துள்ளார்.

இராக் மீதான தாக்குதல் நீண்டதாக இருக்காது- ஒபாமா

இராக்கில் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் நீண்ட நாள்கள் நடை பெறாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை யின் தலைவர் ஜான் போக்னருக்கு ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இராக்கில் சரியான இலக்குடன் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல் கால வரையறைக்கு உள்பட்டதுதான். நீண்ட காலத்துக்கு நீடிக்காது. முக்கியமாக எர்பிலில் உள்ள அமெரிக்கர்களை பாதுகாக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

எர்பிலை நோக்கி முன்னேறும் தீவிரவாதிகளைத் தடுப்பது அவசியமானது. அதே நேரத்தில் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள சிறுபான்மையின மக்களுக்கு மனிதாபிமான உதவிகளும் செய்யப்படுகின்றன.

இராக் அரசின் உதவி யுடன்தான் அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படு கின்றன என்று ஒபாமா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT