மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றியுள்ள எபோலா வைரஸ் பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாகக் கவனிக்கிறது என்றும், அமெரிக்காவில் இந்த வைரஸ் பரவாமல் இருக்க வாஷிங்டனில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிற ‘அமெரிக்க ஆப்பிரிக்க உச்சி மாநாட்டு'க்கு வரும் பிரதிநிதி களை பரிசோதனைக்கு உட்படுத்த இருக்கிறோம் என்றும் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “உலகில் எங்கு புதிதாக நோய் தோன்றினாலும் அதைப் பற்றிய விவரங்களை அறிய அமெரிக்காவில் உள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட முக்கியமான சர்வதேச அமைப்புகளை தொடர்பு கொள்ளும்.
இந்தப் புதிய வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகளில் இந்த வைரஸால் ஏற்படும் நோயின் தாக்கம் உள்ளது. வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டுக்கு 50 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வரவிருக்கிறார்கள். எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகளை பரிசோதனைக்கு உட்படுத்தவுள் ளோம்.
அவர்களில் யாருக்கேனும் இந்த வைரஸ் நோய்த்தொற்று இருந்தால் அவர்கள் அமெரிக்காவை விட்டு உடனே வெளியேற்றப்படுவார்கள். இந்த நோய்த்தொற்று இல்லாதவர்களை மாநாடு முடியும் வரை அவ்வப் போது பரிசோதனைக்கு உட்படுத் துவோம்.
எபோலா வைரஸ் நோய் தொற்று உள்ள நாடுகளில் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார நிறுவனம், வேறு சில நிறுவனங்களுடன் சேர்ந்து அந்நாடுகளில் உள்ள அமைப்புகளுடன் இணைந்து இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவி செய்வோம்.
எபோலா வைரஸ் தொற்று நோயாக இல்லாததால்தான் அதிக அளவில் அந்த நோய் பரவ வில்லை. எபோலா வைரஸ் தாக்கியவர்களைக் கண்ட றிந்து அவர்களுக்கு சிகிச்சைய ளித்து தனிமையில் வைத்திருந் தால் மட்டுமே நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.
ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தாக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்களை அங்கிருந்து வெளியேற்றி அமெரிக்காவுக்கு கொண்டு வந்து சிகிச்சையளிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.