இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மெகன் மார்கல் திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நிறைவடைந்தது.
இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம் ட்விட்டரில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த திருமண விழாவில் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இளவரசர் ஹாரியை திருமணம் செய்தன் மூலம் இங்லாந்து அரச குடும்பத்தில் முதல் கருப்பின கலப்பின இளவரசி என்ற பெருமையை பெற்றுள்ள அமெரிக்க நடிகை மெகன் மார்கல் பற்றிய சுவரஸ்சியமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றில் பலரது கவனத்தை பெற்றது பக்கிங்காம் மாளிகையின் மூன் 22 வருடங்களுக்கு முன்னர் மெகன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
ஆம் சுற்றுலா பயணியாக தனது 15 வயதில் தனது தோழியுடன் பக்கிங்காம் அரண்மனை முன் மெகன் அமர்திருக்கிறார். சுமார் 22 வருடங்களுக்கு பிறகு அந்த அரண்மனையைச் சேர்ந்த இளவரசர் ஹாரியை மெக்கன் திருமணம் செய்திருக்கிறார். நிச்சயம் இது கனவு வாழ்க்கைத்தான் என்று பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து இளவரசி டயானாவுக்கு மெகனுக்கு சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பிரட்டிஷ் இளவரசிகளிலே டயானா மக்கள் சேவை வெளிப்படையால எதையும் பேசும் தன்மை இவற்றால் தனித்து அறியப்பட்டார். டயானா இங்கிலாந்து மக்களால் இதன் காரணமாக கொண்டாடப்பட்டார்.
பெண்ணியம், பெண் முன்னேற்றம், பெண்களின் சம உரிமை குறித்து மெகனின் கருத்துகள் அவரை டயானாவுடன் ஒப்பிட்டு பிரிட்டிஷ் மக்களை பார்க்க வைத்துள்ளது.
மெகன், டயானாவை போல் பேசப்படுவரா...பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதை படிக்க மறந்துடாதீங்க...