உலகம்

எபோலா தொற்று: சோதனை மருந்து உட்கொண்ட லைபீரிய மருத்துவர் பலி

செய்திப்பிரிவு

எபோலோ தொற்று வைரஸ் பாதிப்புக்காக சோதனை மருந்து உட்கொண்ட மருத்துவர் ஆப்ரகாம் பார்பர் உயிரிழந்தார்.

ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, கினியா, சியராலியோன், நைஜிரீயா ஆகிய நாடுகளில் பரவியுள்ள எபோலாவால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,400க்கும் அதிமாக உள்ளது. புதிதாக லைபீரியாவில் 142 பேருக்கு தொற்று இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் இருவருக்கு Zmapp என்ற எபோலா தொற்று நோய்க்கான சோதனை மருந்து அளிக்கப்பட்டு, அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து லைபீரியாவில் எபோலா சிகிச்சைக்கான சுகாதார மையத்தில் பணியாற்றி, எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உட்பட 3 பேருக்கு, பரிசோதனை செய்யப்படாத சோதனை மருந்து அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் மூன்று பேரில் ஒருவரான லைபீரியாவைச் சேர்ந்த மருத்துவர் ஆப்ரகாம் பார்பர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர் பார்பரின் மறைவு, லைபீரியாவில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பார்பர் உடல்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், திடீரென்று ஞாயிறு அன்று அவர் உயிரிழந்தது ஏமாற்றம் அளிக்கின்றது எனவும் லைபீரியா அமைச்சர் லிவீஸ் ப்ரௌன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT