உலகம்

அமெரிக்க அதிபர் பைடனுக்கு கரோனா

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று அறிவித்துது.

இது குறித்து வெள்ளைமாளிகை செயலாளர் கரைன்ஜேன் பெரிவிடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: லாஸ் வேகாஸில் நடந்த தேர்தல்பிரச்சார நிகழ்ச்சியில் அதிபர் பைடன் நேற்று பங்கேற்றார். அதன்பின் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு நடத்திய கரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு லோசான அறிகுறிகள் உள்ளன. அவரது சுவாசம் இயல்பு நிலையில் உள்ளது. உடல் வெப்ப நிலை, பல்ஸ் ஆக்ஸிமெட்ரி அளவுகளும் இயல்பாக உள்ளன. அவர் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி செலுத்திக்கொண்டுள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக அவர் டெலாவர் திரும்பி, ரெஹோபோத்தில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக்கொண்டு தனது பணியை தொடர்வார். அதிபரின் உடல்நிலை குறித்த தகவல்களை வெள்ளை மாளிகை அவ்வப்போது தெரியப்படுத்தும். இவ்வாறு ஜேன் பெரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT