உலகம்

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் போர் அபாயமா? ஐநா பொதுச்செயலர் கூறுவது என்ன?

செய்திப்பிரிவு

ஈரானுடன் செய்துக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் போர் அபாயம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐ. நா., சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் கூறும்போது, "ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் செய்துக் கொண்ட அணு ஆயுதம் ஒப்பந்தம் காக்கப்பட வேண்டும். இதற்கான மாற்றுவழி இல்லாமல் நாம் இதனை அகற்ற கூடாது.  ஈரானுடன் செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்தம் ஒரு ராஜதந்திர வெற்றியாகும். இது தொடர்ந்து நீடிக்க வேண்டும். அமெரிக்க இந்த ஒப்பந்தத்தைலிருந்து விலக கூடாது. விலகினால் போர் மூளும் அபாயம் ஏற்படும்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, "ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்" என்று ட்ரம்ப் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT