பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றடைந்தார். அந்நாட்டில் இருந்து அயோத்திக்கு பேருந்து சேவையை அவர் தொடங்கி வைத்தார்.
கர்நாடகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முடித்த நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நேபாளம் சென்றடைந்தார்.
நேபாளம் தலைநகர் காத்மாண்டிலிருந்து 225 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜனக்பூருக்கு வந்தடைந்த மோடியை நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒளி வரவேற்றார்.
பின்னர் ஜனக்பூரிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி இடையே சுற்றுலா பயணிகளுக்கான பேருந்து சேவையை மொடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் உரையாற்றினார்.
இதன் பின்னர் மதியம் காத்மாண்டில் நேபாள அதிபர் பிந்தியா தேவியை மோடி சந்திக்க இருக்கிறார். இந்தச் சந்திப்பில் முக்கிய மூன்று ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளம் பயணம் குறித்து மோடி கூறுகையில் ‘‘இமாலய பிரதேசமான நேபாளத்துக்கான எனது பயணம் அண்டை நாடுகளுமே முதல் உரிமை என்ற எங்கள் அரசின் நிலைப்பாட்டை காட்டுக்கிறது. இந்தியாவின் பழைய நண்பனான நேபாளத்துடன் நெருக்கமான உறவை பிரதிப்பலிக்கிறது” என்று கூறினார்.
பிரதமராக நேபாளத்துக்கு மோடி மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.