உலகம்

ஆள் கடத்தலுக்கு முடிவு: ஐநா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஆள் கடத்தல் குற்றச் செயல்களுக்கு உலக நாடுகள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.

ஆள் கடத்தலுக்கு எதிரான உலக எதிர்ப்பு தினம் முதல் தடவை யாக ஜூலை 30ம் தேதி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி ஆள் கடத்தல் குற்றத்தை விழிப்புடன் இருந்து தடுக்கும்படியும் கடத்தப்படும் ஆண், பெண், குழந்தைகளின் நிலையை அறிந்து இந்த பிரச்சினைக்கான மூல காரணங்களை சமாளிக்க வழிகாணும்படியும் உலக நாடுகளை ஐநா வலியுறுத்தியுள்ளது.

ஆள் கடத்தல் தடுப்புக்கான சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்று அவற்றை முழுமையாக அமல்படுத்தும்படியும் அது வற்புறுத்தியுள்ளது. ஆள்கடத்தல் என்பது உலக அளவில் பணம் பண்ணும் தொழிலாகிவிட்டது., கடத்தலுக்கு ஆளாவோரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கண்ணியம் மறுக்கப்படுகிறது.

உலகமெங்கும் பின்னிப்பிணைந்த ஆள்கடத்தல் கும்பல்கள் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றன என ஆள் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி விடுத்த சிறப்புச் செய்தியில் ஐநா பொதுச்செயலர் பான் கி-மூன் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT