உலகம்

வன்முறையை ஒழிக்க பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை: இந்திய கல்வியாளர் யோசனை

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தை ஒழிக்க பள்ளிப் பாடத்திட்டங்களில் மாற்றம் தேவை என்று இந்திய கல்வியாளர் ஜெகதீஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவ னங்களுக்கான மாநாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர் ஜெகதீஷ் காந்தி பங்கேற்றுள்ளார்.

அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: சாதி, மதம், பேராசை காரணமாக மக்கள் சண்டையிட்டு வருகின்றனர். பள்ளிப் பருவம் முதலே குழந்தைகள் மனதில் நல்லெண்ணங்களை விதைக்க வேண்டும். மாற்று மதங்களையும் நம்பிக்கைகளையும் மதிக்க கற்றுக் கொடுக்கவேண்டும். 21-ம் நூற்றாண்டு கல்வி 20-ம் நூற்றாண்டில் இருந்து மாறுபட்ட தாக இருக்க வேண்டும்.

இன்றைய நிலையில் குழந்தைகளின் மனதில் பரந்த மனப்பான்மையை வளர்க்க வேண்டும். தேசிய கண்ணோட்டத்தில் இருந்து உலகளாவிய சிந்தனைக்கு அவர்களை மாற்ற வேண்டும். இதற்கு பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT