இந்திய சிறுவன் முகமது அயன் யூனிஸுக்கு துபாய் சுற்றுலா காவல் துறை இயக்குநர், துபாய் சுற்றுலா மகிழ்ச்சி பிரிவின் தலைவர் உள்ளிட்டோர்இணைந்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். 
உலகம்

சுற்றுலா பயணியின் வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறை பாராட்டு

செய்திப்பிரிவு

துபாய்: துபாயில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்க உதவவும் ‘ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஆன்லைன் சேவையை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையோடு துபாய் வீதிகளில் சிறுவன் முகமது அயன் யூனிஸ் உலாவியபோது விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை வழியில் கண்டான். உடனே ‘ஸ்மார்ட் காவல் நிலையம்’ இணையதளத்தில் இதுகுறித்து பதிவிட்டான். இதையடுத்து, துபாய் காவல் துறை அதிகாரிகள் முகமது அயனிடமிருந்து கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டனர். அதனை துபாய்க்குச் சுற்றுலா வந்தபோதுதொலைத்த பயணிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து துபாய் சுற்றுலா காவல் துறை வெளியிட்ட எக்ஸ்பதிவில், "நேர்மைக்கு முன்னுதாரணமாக விளங்கிய இந்திய சிறுவன் முகமது அயன் யூனிஸை துபாய் போலீஸ் மனதார பாராட்டி கவுரவிக்கிறது" என்று கூறியுள்ளர்.

SCROLL FOR NEXT