தென் அமெரிக்க நாடான சிலியைச் சேர்ந்த 3 பொறியியல் மாணவர்கள் யாராலும் திருட முடியாத சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த சைக்கிளை எர்க்கா என்று அழைக்கும் இந்த மாணவர்கள், இதன் சிறப்பினை இணைய தளத்தில் விளக்கியுள்ளனர். அழகுடன் காட்சியளிக்கும் இந்த சைக்கிளை 3 எளிய நடைகள் மூலம் 20 வினாடிகளில் அதன் ஃபிரேம்களைக் கொண்டே ஒரு கம்பத்தில் பூட்டிவிட முடியும்.
மற்ற சைக்கிள்களில் உள்ள பூட்டை திருடர்கள் உடைத்துவிட முடியும். ஆனால் இந்த சைக்கிளில் ஃபிரேம்களே பூட்டாக இருப்பதால் ஃபிரேம்களை உடைத்தால் மட்டுமே சைக்கிளை திருட முடியும். ஃபிரேமை உடைத்தால் அந்த சைக்கிளை பயன்படுத்த முடியாது என்பதால் இதை யாரும் திருட மாட்டார்கள் என்கிறார்கள் இந்த மாணவர்கள்.