அல்ஜீரியாவில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அல்ஜீரியா தலைநகருக்கு அருகே உள்ள பவ்ஃபரிக் விமான தளத்திலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் இல்யுசின் || - 76 இன்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ விமானத்தில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கும் புகைப்படங்கள் அல்ஜீரிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அல்ஜீரிய அரசு தெரிவித்துள்ளது.