உலகம்

இராக்கில் வான்வழி தாக்குதலுக்கு ஒபாமா உத்தரவு

செய்திப்பிரிவு

இராக்கில், அப்பாவி பொதுமக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வடமேற்கு இராக்கில், மலைப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் 'யசிதி' சிறுபான்மை சமூகத்தினருக்கு வான்வழியாக உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இரவு (வியாழக்கிழமை) தொலைக்காட்சியில் பேசிய அதிபர் ஒபாமா: "இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் சிறுபான்மை சமூகத்தினரை காப்பாற்ற வழி இருக்கிறது என தெரிந்தும், அமெரிக்காவால் அதை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. இராக்கின், குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான் எர்பில் நோக்கி தீவிரவாதிகள் மேலும் முன்னேறினால் அமெரிக்கா அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும். இருப்பினும், இராக்கில் அமெரிக்கப் படைகள் தரைவழி தாக்குதல் நடத்த நிச்சயம் வாய்ப்பில்லை" என்றார். சுமார், 9 நிமிடங்கள் அவர் தொலைக்காட்சியில் பேசினார்.

SCROLL FOR NEXT