சிரியாவில் போர் நிறுத்தத்தை அரசுப் படைகள் மீறியதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், சிரிய அரசுப் படையோ கிளர்ச்சியாளர்கள் தரப்புதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மக்கள் வரும் பாதையில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு வந்ததன் விளைவாக ரஷ்ய அதிபர் புதின் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி தினமும் 5 மணி நேர போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்கள் வெளியேறும் பாதை மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசத்துக்கு ஆதரவு தெரிவித்து போர் தொடுத்து வரும் ரஷ்யா கூறியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் தரப்போ, போர் நடைபெறும் பகுதிகளில் மக்களை வெளியேற்றுவதற்காகவும், மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தில் சிரிய - ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்ட்துவதாக லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிரிய கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.