அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்திக்க ஆர்வமில்லை என்று வடகொரியா கூறியுள்ளது.
தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று ஜப்பானிலிருந்து தென் கொரியா வருகிறார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் வடகொரியா அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைக் காணவரும் அமெரிக்கா - வடகொரியா பிரதிநிதிகள் சந்திப்பார்கள் என்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்திக்க ஆர்வமில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய அதிகாரிகள் தரப்பில், "தென் கொரியா வரும் அமெரிக்க துணை அதிபர் பென்ஸை சந்திக்கும் ஆர்வம் ஏதும் இல்லை. விளையாட்டுத் திருவிழாவை அரசியல் சந்திப்பாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை. அவ்வாறு செய்யத் தேவையும் இல்லை" என்று கூறியுள்ளது.