உலகம்

ரூ.6.8 கோடி மோசடி: இந்தியப் பெண் மீது குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் விசா முறைகேடுகளில் ஈடுபட்டு ரூ.6.8 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக ரீதிகா என்ற இந்தியப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய குடியேற்ற துறையின் முன்னாள் ஊழியரான ரீதிகா, அந்தத் துறையின் ரகசிய ஆவணங்கள், அரசு முத்திரைகளை திருடி தனது கணவர் ஜிதேந்தருக்கு வழங்கியுள்ளார். அவற்றைப் பயன்படுத்தி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பல்வேறு விசா மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக 2011-ம் ஆண்டில் ரீதிகாவின் வீட்டில் ஆஸ்திரேலிய போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான போலி ஆவணங்கள், ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் ரீதிகாவும் அவரது கணவரும் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இருவரும் சேர்ந்து ரூ.17 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்ப தாகவும் இதில் சுமார் ரூ.6.8 கோடியுடன் அவர்கள் டெல்லிக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குடியேற்றத் துறை ஊழல்கள் குறித்து “பேர் மீடியா” என்ற ஊடக நிறுவனம் புலனாய்வு செய்து இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT