நிலநடுக்கம் 
உலகம்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தஜிகிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின்படி, ஜிகிஸ்தானில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ஆழம் 80 கிலோமீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஜப்பானில் புத்தாண்டு தினமான (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT