சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் சில மிதவாத எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளிக்கின்றன.
இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையின் முயற்சியின்பேரில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் அதிபர் ஆசாத், எதிர்க்கட்சிகள் இடையிலான 2 நாள் அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜுன் கூறியபோது, சிரியா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இதுதான் கடைசி நம்பிக்கை என்றார். எனினும் இந்த முறையும் அரசியல் தீர்வு எட்டப்படுவது கடினம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.