சீனாவில் இன்று அதிகாலை பயங்கர மண்சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன 70-க்கும் மேற்பட்டோரில் 23 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள் லோங்யாங் மாவட்டத்தில், இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டது.
இதில் அந்த பகுதியில் வசித்த வந்த 70-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இவர்களில் பலரது நிலை என்னவென்றே தெரியாது இருந்த நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக யுனான் மாகாண செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் 23 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக சீனாவின் பல மாகாணங்களில் மழை தொடர்ந்து வருகிறது.
இன்று காலை திடீர் மண்சரிவு ஏற்பட்டதாகவும், தொடர் மழை பெய்து வருவதால் மீட்பு பணி சிறிது தாமதமானதாகவும், அவசர பணியில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ மற்றும் மீட்பு உதவிகளை வழங்குவதில் 1000 பேர் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லோங்யாங் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.