ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண் பத்திரிகையாளர்கள் இணைந்து நடத்தும் ‘கபர் லஹரியா’ (செய்தி அலைகள்) இணைய இதழுக்கு ஜெர்மனி விருது வழங்கியுள்ளது.
ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், இந்த ஆன்-லைன் இதழைப் பாராட்டி சிறப்பு சர்வதேச ஊடகப் பேரவை விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்த இதழின் ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர் பூர்வி பார்கவா கூறும்போது, பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் ஊரகப் பகுதி மேம்பாட்டிற்கு உழைத்து வரும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் 40 பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுகின்றனர் என்றார்.