அதிபர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி வாக்களிப்பதை புறக்கணிக்கச் சொவ்வது சட்ட விரோதமானது என்று ரஷ்யா கூறியுள்ளது.
இதுகுறித்து ரஷ்யா தரப்பில், ''ஊழல் குற்றச்சாட்டல் தண்டனை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேர்தல் ஆணையம் சட்ட விதிகளுக்கு உட்பட்டே அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்றும், நாடு முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதும் சட்ட விரோதமானது" என்று கூறியுள்ளது.
41 வயதான ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி ஊழல் வழக்கில் தண்டணை பெற்றதால் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
புதினுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸ் நாவல்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.