இலங்கைத் தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்ட மைப்பை (டி.என்.ஏ.) ஏற்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித் துள்ளது.
இலங்கை இனப் பிரச்சினையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தென்ஆப்பிரிக்கா முன்வந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டின் துணை அதிபர் சிரில் ரமபோஸா விரைவில் கொழும்பு வருகிறார்.
அவர் இலங்கை அரசு தரப்பு பிரதிநிதிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் டி.என்.ஏ.வுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. இதுதொடர்பாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹி லிய ரம்புக்வெல கூறியதாவது:
தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங் கைத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி இல்லை. நாடாளுமன்றத்தில் வேறு சில தமிழ் கட்சிகளும் உள்ளன. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு டன் பேச்சு நடத்த முடியாது என்றார்.