காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 115 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப் பினருக்கு இடையிலான போர் 18 நாள்களைக் கடந்து தொடர்கிறது. சர்வதேச நாடுகள், ஐ.நா. ஆகியவற்றின் வலியுறுத்தலையும் மீறி இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்கிறது.
ஐந்து நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் காஸாவின் புதிய எல்லைப் பகுதியை நிர்மாணிக்கலாம் என அவர் தெரிவித்துள்லார்.
815 பேர் பலி
கடந்த 8-ம் தேதி முதல் நடத்தப் பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 815 ஆக உயர்ந்துள்ளது. வியாழக் கிழமை ஒரே நாளில் 115 பாலஸ் தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
30 வீடுகள் தகர்ப்பு
வெள்ளிக்கிழமை அதிகாலை காஸா பகுதியில் இஸ்ரேல் விமா னங்கள் நடத்திய தாக்குதலில் 30 வீடுகள் இடிந்தன. இத்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்துக்கு அடுத்தநிலையில் பெரிய அமைப்பான இஸ்லாமிய கிளர்ச்சி அமைப்பின் மூத்த தலைவர் சலா ஹஸானெய்ன், அவரது இரு மகன்களுடன் கொல்லப்பட்டார்.
ஐ.நா. கண்டனம்
வடக்கு காஸாவிலுள்ள ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ- மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நெதான்யாஹு வருத்தம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு கூறும்போது, “உயிரிழந்த ஒவ்வொரு பாலஸ் தீனருக்காகவும் நான் வருந்து கிறேன். ஆனால், இதற்கு ஹமாஸ் தான் முழுப்பொறுப்பு. போர் முழுவீச்சில் நடைபெறும். தரை மற்றும் வான்வழித் தாக்குதல் தொடரும்” எனத் தெரிவித் துள்ளார்.