நார்வே தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஸ்டோக் எனுமிடத்தில் 8,000 ஆண்டு களுக்கு முந்தைய கற்கால மனிதனின் மண்டையோட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இப்பகுதியில், கற்கால மனிதர் களின் 2 குடியிருப்புகள் இருந்தி ருக்கக் கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த 2 மாதங் களாக அகழாய்வுப் பணி நடை பெற்று வந்தது.
இப்பகுதியில் வேறு சில பொருட் கள் கிடைத்தாலும், இந்த மண்டை யோட்டில் சில மூளைப்பகுதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கற்கால வாழ்வாதார நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆய்வுக்கு உதவியாக இருக்கும்.
இது தொடர்பாக அகழாய்வுக் குழுவின் தலைவர் கவுடே ரெய்டன், நார்வே தொலைக்காட்சிக்கு (என்ஆர்கே) அளித்த பேட்டியில், “நாம் அதிகம் அறிந்திராத கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதியில் அகழ்வுப் பணியில், இதுபோன் றவை கிடைப்பது மிக அரிதானது. இந்த மண்டையோட்டின் உட்புறத் தில் சாம்பல் நிறத்தில் களிமண் ணைப் போன்ற வஸ்து உள்ளது” என்றார்.
மேலும் ஓர் எலும்பு கிடைத்திருப் பதை ஆய்வாளர்கள் உறுதி செய் துள்ளனர். அது, மனிதன் அல்லது வி லங்கினுடையதாக இருக்கலாம். அந்த எலும்பு தோள்பட்டையா கவோ, இடுப்பெலும்பாகவோ இருக்கலாம்.
ஏற்கெனவே கிடைத்துள்ள எலும்புகளை ஆய்வு செய்ததில், அவை கி.மு 5,900-ம் காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரிய வந்துள்ளது.