இஸ்ரேலில் போர் பயிற்சி பெற்ற 3,60,000 பேர் காசா அருகே வரவழைக்கப்பட்டுள்ளனர். காசா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் ராணுவம் களம் இறங்கியுள்ளது.
செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்: இஸ்ரேல் ராணுவத்தினர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என சுமார் 150 பேரை பிணைக் கைதிகளாக வைத்து, இஸ்ரேலை ஹமாஸ் தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்
விடுத்துள்ளது.