உலகம்

கிளர்ச்சியாளர்கள்- பழங்குடியினர் மோதல்: பிலிப்பின்ஸில் 18 பேர் பலி

செய்திப்பிரிவு

பிலிப்பின்ஸில், தெற்கு பிலிப்பின் மாகாணத்தில் மனோபோஸ் பழங்குடியினர் மீது, புதிய மக்கள் ராணுவ கொரில்லா கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

பழங்குடியினர் எதிர்த் தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். கொரில்லா படையினர் 1969-ம் ஆண்டு முதல் அரசுக்கு எதி ராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் படை யில் மனோபோஸ் பழங்குடி யினரைச் சேர்க்க கிளர்ச்சி யாளர்கள் முயன்றனர். இதற்கு, பழங்குடியினர் உடன்பட வில்லை. இது மோதலாக வெடித்தது.

கொரில்லா படையினர், பழங்குடியினர் மீது செவ் வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, ராணுவ மேஜர் ஜெனரல் ரிக்கார்டோ விசாயா கூறியதாவது:

கிளர்ச்சியாளர்கள் மீது மனோபோஸ் பழங்குடியினர் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில், 12 கொரில்லா படையினரும், 4 பழங்குடியினரும் உயிரிழந்தனர். பழங்குடியினருக்கு ஆதர வாக ராணுவம் களமிறங்கி தாக்குதல் தொடுத்தது. கிளர்ச்சி யாளர்கள் தப்பி விடாத வகையில் சுற்றி வளைக்கப்பட்டனர்.

மோதல் மேலும் வலு வடைந்ததில் ஒரு ராணுவ வீரரும் ஒரு கிளர்ச்சியாளரும் உயிரிழந்தனர். கொரில்லா கிளர்ச்சியாளர்கள் வனப்பகுதிக்குள் பின்வாங்கி விட்டனர். ராணுவ ஹெலி காப்டர்கள் உதவியுடன் தாக்கு தல் நடத்தியபடி, வீரர்கள் கிளர்ச்சியாளர்களைப் பின் தொடர்ந்துள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT