உலகம்

காசா நகரம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

செய்திப்பிரிவு

காசா: பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன.

இஸ்ரேலை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது குண்டுமழை பொழிந்தன.

இதில் அல்-குவாத் திறந்தநிலை பல்கலைக்கழகம் அருகில் உள்ள 5 மாடி குடியிருப்பு தரைமட்டமானது. இதேபோல அந்த நகரின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் பல்வேறு குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன. பலர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.

SCROLL FOR NEXT