மலேசியாவில் கடந்த 2 மாதங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.இ) அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரை மலேசிய போலீஸார் தேடி வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் அமைப் பைச் சேர்ந்த 3 பேர் மலேசியாவில் கடந்த மே 15-ம் தேதி கைது செய் யப்பட்டனர். இந்நிலையில் அந்த அமைப்பின் முன்னணி தலைவர் கள் 4 பேரை மலேசிய போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
எல்.டி.டி.இ. இயக்கத்தை புதுப்பிக்க முயன்றதாகவும், இதன் செயல்பாடுகளுக்கு உரிய இடமாக மலேசியாவை பயன்படுத்த முயன்றதாகவும் போலீஸார் இவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்றும் மற் றொருவர் 1999-ல் இலங்கையின் அப்போதைய பிரதமர் சந்திரிகா குமாரதுங்கா கொலை முயற்சியில் தொடர்புடையவர் என்றும் போலீஸார் கூறுகின்றனர். ஆனால் இவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.
32, 37, 43 மற்றும் 45 வயதுடைய இவர்கள், இலங்கையில் ஏற் கெனவே நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என கருதப்படுகிறது. 2009 முதல் மலேசியாவில் வசித்து வரும் இவர்கள், எல்.டி.டி.இ. வட்டாரத்தில் மிகவும் மதிக்கப்படுபவர்கள் என்று ‘தி ஸ்டார்’ நாளேடு குறிப்பிட்டுள்ளது.
“1990-களின் தொடக்கத்தில் இருந்து இவர்கள் எல்.டி.டி.இ. உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவர் சிறுவனாக இருந்தபோது அந்த இயக்கத்தில் சேர்ந்தவர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இவர்கள் மலேசியா வந்துள்ளனர். இங்கிருந்து எல்.டி.டி.இ. இயக்கத்தை புதுப்பிக்க முயன்றதுடன், இலங்கைக்கு எதிரான தாக்குதல் திட்டங்களை வகுக்கவும் நம்பிக்கை கொண்டிருந்தனர்” என்று அந்நாளேடு கூறுகிறது.
போலீஸ் ஐ.ஜி. காலித் அபுபக்கர் கூறுகையில், “கைது நடவடிக்கையின்போது, பல்வேறு நாடுகளின் போலி பாஸ்போர்ட்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் குடியேற்றத் துறையின் முத்திரைகள் கைப்பற்றப்பட்டன” என்றார்.