உலகம்

கேரள படஅதிபர் குடும்பத்துடன் துபாயில் மர்ம சாவு

செய்திப்பிரிவு

கேரளத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். சௌபர்னிகா பிலிம்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். துபாயில் வர்த்தக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் படுக்கை அறையில் சந்தோஷ் குமார், அவரது மனைவி மஞ்சு, மகள் கவுரி ஆகியோர் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

வீட்டுக்குள் எவரும் புகுந்ததற்கான தடயங்கள் இல்லாத நிலையில் இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். கடன் தொல்லையே சந்தோஷ் குமாரின் இம்முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் சந்தேகிக்கின்றனர்.

SCROLL FOR NEXT