பிரான்ஸில் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், "பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள பெர்பிகான் அருகே பள்ளிப் பேருந்து மற்றும் ரயில் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஆறு பேர் பலியாகினர். இதில் நான்கு பேர் பள்ளிக் குழந்தைகள். 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிப் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மோசமான விபத்தாக இது அறியப்படுகிறது.