பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சகோதரி பாத்திமா ஜின்னா இறந்த 47 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவரது வீட்டுக்கான குடிநீர் கட்டணத்தை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கராச்சி நகர குடிநீர் வடிகால் வாரியம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. இதன்படி ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 774 செலுத்த வேண்டும். 10 நாள்களுக்குள் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள இச்செய்தி அந்நாட்டு மக்களிடையே வியப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.