உலகம்

ஆப்கான். போலீஸ் தலைமையகத்தில் தாலிபன்கள் தற்கொலைப்படைத் தாக்குதல்: 6 பேர் பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஆறு போலீஸார் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ’ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் தாலிபன் தீவிரவாதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு போலீஸார் கொல்லப்பட்டனர். 4  பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

 ஆப்கானிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் ராணுவ முகாம் மீது தாலிபன்கள் நடத்திய தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 43 பேர் பலியாகினர்.

SCROLL FOR NEXT