ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது.
இதுகுறித்து ஈரான் நிலஅதிர்வு மையம் தரப்பில் கூறும்போது, "ஈரானில் கெர்மன் மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது" என்று கூறப்பட்டுள்ளது.
மீட்புப் பணியினர் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தயார் நிலையில் உள்ளனர். எனினும் பாதிப்புகள் ஏதும் இதுவரை நிகழ்வில்லை என்று செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இராக் எல்லையை ஒட்டிய கேர்மான்ஷா மாகாணத்தில்தான் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக ஏற்பட்ட நில நடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.