உலகம்

ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியதால் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 777 விமானம் உடனடியாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் லிபர்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஞாயிற் றுக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணிக்கு புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் விமானத்தின் இடது இன்ஜின் பழுதடைந்தது. இதை யடுத்து உடனடியாக நெவார்க் விமான நிலையத்திலேயே 5 மணிக்கு விமானம் தரையிறக்கப் பட்டதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT