உலகம்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கார்னர் காலமானார்

செய்திப்பிரிவு

'தி ராக்ஃபோர்ட் பைல்ஸ்', 'தி நோட்புக்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கார்னர் காலமானார். அவருக்கு வயது 86.

நடிகர் ஜேம்ஸ் கார்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை மாலை கார்னர் இறந்து கிடந்ததாக காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஜேம்ஸ் கார்னர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பெயர்பெற்றவர் ஆவார்.

1957 முதல் 1960 வரை வெளியிடப்பட்ட 'மேவரிக்' என்ற நகைச்சுவை நாடகத் தொடரில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார் அவர். பின்னர் அதே கதையை கொண்டு, 1994-ல் 'மேவரிக்' திரைப்படமாக்கப்பட்டது.

SCROLL FOR NEXT