உலகம்

உக்ரைன் விரைந்தது விசாரணைக் குழு: மலேசிய பிரதமர்

செய்திப்பிரிவு

உக்ரைனில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்.எச்.17 குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள சிறப்புக் குழு ஒன்று உக்ரைன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் உகரைன் தலைநகர் கியெவ் செல்லும் குழுவில் மலேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினர் மற்றும் விசாரணை அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசென்கோவுடன் விரிவாக பேசிவிட்டதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்: " மலேசிய விசாரணை குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என உக்ரைன் அதிபர் தன்னிடம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், கிளிர்ச்சியாளர்கள் வசம் உள்ள உக்ரைனில் கிழக்குப் பகுதிக்கு மலேசிய விசாரணை குழுவினர் சென்று வர சுமுக சூழல் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்" என்றார்.

SCROLL FOR NEXT