ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சுரங்கப்பாதையில் சென்ற மெட்ரோ ரயில் தடம்புரண்டு விபத் துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர். இதில், 55-க்கும் மேற்பட்டோர் உயி ருக்குப் போராடி வருகின்றனர்.
பார்க் போபேடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நடைபெற்றது. ‘ரயிலில் தவறுதலாக எச்சரிக்கை மணி ஒலித்ததால், உடனடியாக பிரேக் போட்டதில், ரயில் நிலைகுலைந்து தடம்புரண்டது. இதனால் பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்’ என, அவசரகால நடவடிக்கைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ சுகாதாரத்துறை தலைவர் ஜார்ஜி கொலுகோவ் கூறும்போது, “இவ்விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 106 பேர் காய மடைந்துள்ளனர். இவர்களில் 55 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றார்.
60 ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்தில் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளன. படுகாயமடைந்த வர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். சுரங்கப்பாதையில், ரயிலுக்கு அடியில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.