உலகம்

அமெரிக்காவில் நகரம் விற்பனைக்கு: ரூ.2.4 கோடிதான் விலை

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் சில பகுதிகளில் குட்டி நகரம் ஒன்றுக்கு ஒருவரே உரிமையாளராக இருப்பர். அதைப்போன்ற சிறு நகரம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. லான்ஸ் பென்ஸன் என்பவருக்குச் சொந்தமான ஸ்வெட் என்ற இந்தச் சிறு நகரம், பென்னட் கவுன்டியில் அமைந்துள்ளது.

இந்நகரத்தில் ஒரு மதுக்கூடம், ஒரு பணிமனை, மூன்று வாகனங் கள், ஒரு வீடு மற்றும் 6.16 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் விலை 3 லட்சத்து 99 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2.4 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டணச் சலுகை தொடர்பான வர்த்தகத்தில் ஈடு பட்டுள்ள பென்ஸன், ‘இந்த சிறு நகரத்தை தான் நேசித்த போதும், வியாபாரத்தில் கவனம் செலுத்துவதற்காக இதை விற்கப் போவதாகக்’ கூறியுள்ளார்.

நூற்றாண்டுப் பழமை வாய்ந்த் ஸ்வெட் நகரத்தில் குடியிருந்தவர் கள் காலப்போக்கில் நகர்ப்பகுதி களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இதனால், ஸ்வெட் நகரத்தில் தற்போது ஒரு வீடு மட்டுமே உள்ளது. 1940-ம் ஆண்டுகளில் இங்கு 40 பேர் வசித்து வந்த னர். அஞ்சலகமும் செயல் பட்டு வந்தது. இந்த நகரத்தை பென்ஸன் 1998-ம் ஆண்டு வாங்கினார்.

இருவர் மட்டும்

பின்னர் தன்னிடமிருந்து விவாகரத்து பெற்ற மனைவிக்கு கொடுத்து விட்டார். பிறகு மீண்டும் 2012-ம் ஆண்டு அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்நகரில் தற்போது பென்ஸன், அவரது புது மனைவி ஆகிய இருவர் மட்டுமே வசிக்கின்றனர்.

இரண்டு மைல் சுற்றளவில் வேறெங்கும் நீர் கிடைக்காது என்பதால், இந்நகரத்தில் அவ்வப் போது உள்ளூர் மாடு மேய்ப்பர்களும், கோதுமை விவசாயிகளும் இங்கு குறைந்த எண்ணிக்கையில் கூடுவது வழக்கம்.

SCROLL FOR NEXT