அமெரிக்க அதிபர் மாளிகை மீதும், அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
வடகொரிய தலைநகர் பியோங் யாங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டு ராணுவ துணைத் தளபதி ஹுவாங் பியோங் பேசியதாவது:
“சமீப காலமாக தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் போர்ப் பயிற்சி நடவடிக்கைகள் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. அணு ஆயுதத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் போர் விமானங்களை அமெரிக்கா பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறது.
நமது நாட்டின் இறையாண்மைக்கு அமெரிக்க ஏகாதிபத்தி யவாதிகள் அச்சுறுத்தலாக இருந்தால், அவர்களின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையிலும், பென்டகனிலும் அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.