சீனாவில் நடந்த சாலை விபத்தில் 38 பேர் பலியாகினர்.
சீனாவில், லாரி ஒன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான லாரி பின்னே வந்த 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் மொத்தம் 38 பேர் பலியாகினர்.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில், லாரி ஒன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது அந்த சாலையில் வந்த வாகனங்களின் பின்னால் வந்த மற்ற 5 வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 38 பேர் பலியானதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விபத்தில் சிக்கிய சிலர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் சமீபத்தில் நடந்திராத பயங்கர விபத்தாக இந்த விபத்து கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.