உலகம்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் ஹமாஸ் தீவிரவாதிகள் 9 பேர் சாவு

செய்திப்பிரிவு

பாலஸ்தீனத்தின் காஸா முனை பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் 9 பேர் கொல்லப் பட்டனர். இதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என ஹமாஸ் எச்சரித் துள்ளது.

இஸ்ரேலிய விமானப்படை திங்கள்கிழமை காலை 2 சுற்று களாக 14 இலக்குகளை குறிவைத்து குண்டுகளை வீசியதில் இந்த 9 பேரும் இறந்தனர். இதில் முதல் சுற்றில் ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த 6 மறைவிடங்கள் மீது குண்டு வீசப்பட்டது. இரண்டாவது சுற்றில் 5 ராக்கெட் லாஞ்சர்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.

இஸ்ரேலிய விமானப் படை ஞாயிற்றுக்கிழமை இரவும் மத்திய காஸாவில் தாக்குதல் நடத்தியது. “இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தவர்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாவும் இதில் பாலஸ்தீன தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கூறின.

இந்நிலையில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் சமி அபு சுஹ்ரி கூறும்போது, “எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள காஸாவின் தெற்கு நகரான ரஃபாவில், பெரும்பாலும் எங்கள் உறுப்பினர்கள் ஒன்றுகூடும் இடங்களில் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இது மிகப்பெரிய அத்துமீறல். இதற்கு எதிரிகள் உரிய விலை கொடுக்க வேண்டி யிருக்கும்” என்றார்.

மேற்கு கரை பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட 3 இஸ்ரேலிய மாணவர்களை தேடும் பணியை கடந்த ஜூன் 14-ம் தேதி இஸ்ரேல் தொடங்கியது. இதன் பிறகு சுமார் 150 முறை இஸ்ரேலிய பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் காய மடைந்ததாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை ஞாயிற்றுக் கிழமை கூறியது.

SCROLL FOR NEXT