உலகம்

நடுவானில் தீப்பிடித்த ஆஸ்திரேலிய விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 10.45 மணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கி பறந்தது.

இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எரிபொருள் தீப்பிடித்து எஞ்சினில் பற்றித் தீ பிடித்ததாக தெரிகிறது. எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இதனால 93 பயணிகள் உயிர்பிழைத்தனர்.

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் தீயணைப்புத்துறை வீரர்கள் விமானத்தில் தீப் பற்றிய பகுதியை சரி செய்தனர். முன்னதாக விமானத்தின் மேல் பகுதியில் தீப்பிழம்பு தென்பட்டதால், மோசமான விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது.

SCROLL FOR NEXT