உலகம்

இராக் நாடாளுமன்ற புதிய தலைவர் தேர்வு

செய்திப்பிரிவு

இராக் நாடாளுமன்றத்தின் புதிய தலைவராக சன்னி பிரிவைச் சேர்ந்த அரசியல்வாதியான சலீம் அல் ஜபூரி செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தகவலை அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. பெரும்பான்மையான வாக்குகள் அவருக்கு கிடைத்ததாக தொலைக்காட்சி செய்தி மேலும் தெரிவிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜபூரிக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சியை தொலைக்காட்சி வெளியிட்டது.

SCROLL FOR NEXT