படம்: ட்விட்டர் 
உலகம்

பிரதமர் மோடிக்கான வெள்ளை மாளிகை விருந்தில் முகேஷ் அம்பானி, சுந்தர் பிச்சை மற்றும் பலர்!

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சார்பில் அரசு முறை விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

முக்கியமாக இந்த விருந்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அவரது மனைவி அஞ்சலி பிச்சை, மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செரோதா இணை நிறுவனர் நிகில் காமத், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் இருநாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசு தரப்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்து ஏற்பாடுகளை அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் நேரடியாக மேற்பார்வை செய்தார். வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் இந்த விருந்து அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT