உலகம்

தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா

பிடிஐ

தீவிரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தே தீர வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஹிதர் கூறும்போது, "தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்த எங்களது நிலைப்பாட்டை பலமுறை அந்நாட்டிடம்  தெரியப்படுத்திவிட்டோம்.

பாகிஸ்தான் அவர்களது எல்லைப் பகுதியிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தே தீர வேண்டும்" என்றார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT