உலகம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: ஐஎஸ் தீவிரவாதிகள் 14 பேர் பலி

ஏபி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் குன்பூர் மாகாணத்தில்  இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து இன்று (சனிக்கிழமை)  குன்பூர் மாகாண ஆளுநர்  அப்துல் கனி கூறும்போது, "குன்பூர் மாகாணத்திலுள்ள ஜாவ்காவ் மாவட்டத்தில் அமெரிக்கப் படைகள் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 14 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்றார்.

ஆனால் இந்த வான்வழித் தாக்குதல் குறித்து அமெரிக்கப் படை தரப்பிலிருந்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஆப்கனில் தாலிபன்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படை அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம்  ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் மிகப் பெரிய குண்டு வீசயது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT